Tamilnadu
சாலையில் நிர்வாணமாகத் திரிந்த நபர்.. ஆடை உடுத்தி உணவு ஊட்டிய மனிதி : நெகிழ்ச்சி சம்பவம்!
திருநெல்வேலி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் நெல்லை - மதுரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் நிர்வாணமாக நடந்து சென்று கொண்டிருந்தார். இதைப் பார்த்த நந்தினி உடனே வாகனத்தை நிறுத்தினார்.
பின்னர், இருசக்கர வாகனத்திலிருந்த சால்வை துணியை எடுத்துச் சென்று, அந்த நபரின் இடுப்பில் கட்டிவிட்டார். இதையடுத்து அருகிலிருந்த கடைக்குச் சென்று உணவு வாங்கி வந்து அவரே அந்த நபருக்கு ஊட்டிவிட்டார்.
ஒருவர் அசிங்கமாக இருந்தாலே முகம் சுளிக்கும் இந்த காலத்தில் பெண் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு ஆடை உடுத்த செய்து, உணவு ஊட்டிய மனிதாபிமானத்தை அனைவரும் வெகுவாக விழந்து பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’
-
நெஞ்சத்தைக் கனக்கச் செய்கின்றன : உதவியாளராகப் பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
“Comeback கொடுப்பதில் நாம் Specialist.. புதுமுகங்களுக்கு பொறுப்பு” : செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!