Tamilnadu
நீச்சல் பழகிய சிறுவனுக்கு நேர்ந்த கதி.. குடும்பத்தினர் சோகம்: நடந்தது என்ன?
நாமக்கல் மாவட்டம், அரியாகவுண்டம் பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் சுராஜ். இவர் அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று பள்ளிக்குச் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஈச்சம்பாறை பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்றுள்ளார். நீச்சல் தெரியாத சுராஜ் நண்பர்களுடன் சேர்ந்து நீச்சல் பழகியுள்ளார்.
அப்போது, கல்குவாரி குட்டையின் ஆழமான பகுதிக்குச் சென்றதால் அவர் நீரில் மூழ்கியுள்ளார். அதைப் பார்த்த அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் இவர்களால் அவரை மீட்க முடியவில்லை. உடனே இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பிறகு அங்கு விரைந்து வந்த போலிஸார் சுராஜை சடலமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
முகத்தை மறைத்துக் கொண்டு வெளியேறுவது ஏன்? : பழனிசாமிக்கு தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“இதுக்கெல்லாம் துடிக்காத நெஞ்சம் முகமூடி வீடியோவை வெளியிட்டதால துடிக்குதோ” -அதிமுகவுக்கு குவியும் கண்டனம்
-
61 வயது மூதாட்டியிடம் 3 சவரன் தங்கநகை வழிப்பறி.. தவெக பிரமுகர் கைது.. விசாரணையில் ஷாக்!
-
”வாக்கு திருடர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் பாதுகாக்கிறார்” : மீண்டும் ராகுல் காந்தி MP குற்றச்சாட்டு!
-
முகத்தை மறைத்து சென்ற பழனிசாமி: பத்திரிகையாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிமுக.. Chennai Press Club கண்டனம்!