Tamilnadu
கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்.. உயிரைக் காப்பாற்றிய போலிஸ்: குவியும் பாராட்டு!
சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் போலிஸார் சபின், ராஜா ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இளைஞர் ஒருவர் திடீரென கடலில் மூழ்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த காவலர்கள் உடனே கடலுக்குள் நீந்திச் சென்று அந்த நபரைக் கரைக்கு மீட்டு வந்தனர். பின்னர் அவரிடம் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
இதில் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பணீந்திரகுமார் என்பது தெரியவந்தது. மேலும் இவர் சென்னையைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இந்தக் காதல் திடீரென முறிந்ததால் பணீந்திரகுமார் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து பெசன்ட் நகர் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரைக் காப்பாற்றிய போலிஸாருக்கு காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் காவலர்களுக்குப் பொதுமக்களிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!