Tamilnadu
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் சிறையில் அடைப்பு.. அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறை!
சென்னை பள்ளிகாரணை அடுத்த ஜல்லடியன்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனஜ்மென்ட் 3ம் ஆண்டு படித்து வரும் இரு மாணவிகளுக்கு, அக்கல்லூரி பேராசிரியர் ஆப்ரகாம் அலெக்ஸ் என்பவர் பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்ததாக கடந்த 6ம் தேதி கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
கல்லூரி நிர்வாகம் மாணவிகள் கொடுத்த புகாரை அலட்சியப்படுத்தி பேராசிரியர் ஆபரகாம் அலெக்ஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் வாக்குவாத்தில் ஈடுபட்டுனர்.
பின்னர் பள்ளிகாரணை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். மாணவிகளுக்கு, கல்லூரி பேராசிரியா் பாலியல் தொல்லை கொடுப்பதை கண்டித்து மாணவ,மாணவிகள் கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதையடுத்து, பேராசிரியர் ஆபிரகாம் அலெக்ஸ்(48) என்பவரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் போலிஸார் நடந்திய விசாரணையில், பேராசிரியர் ஆபிரகாம் அலெக்ஸ் மாணவிகளிடம் பாலியல் சீன்டலில் ஈடுபட்டது உண்மை என்று தெரியவந்தது. இதை அடுத்து அவர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், மற்றும் 354(a) பெண்களின் மானத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பள்ளிக்கரணை போலிஸார் இன்று காலை கைது செய்து சிறைக்கு அனுப்பினார்கள்.
Also Read
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!
-
தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா இதுதானா? : தனது அனுபவத்தை பகிர்ந்து குற்றம்சாட்டிய தயாநிதி மாறன் MP!
-
வாகை சூடிய வடக்கு மண்டல சந்திப்பு; கலைஞைரின் கொள்கைப் பேரன் என்பதை செயலால் நிரூபித்து வரும் உதயநிதி!