Tamilnadu
”அவங்க மன வேதனையை கொட்டித் தீர்க்க விடுங்க” - பெற்றோர், ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை!
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சூளியாபட்டியின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ரெங்கநாதன் நிதியில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கான புதிய வகுப்பறை கட்டிடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
பின்னர் அங்கிருந்த மாணவிகளை தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்படி கூறினார். அப்போது மாணவிகள் எழுந்து வந்து தமிழ்தாய் வாழ்த்து பாடி அச்சத்தினர். இதைக்கேட்ட அமைச்சர் மாணவிகளுடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதோடு வெரிகுட் என்று கூறி நன்றியும் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாங்காடு பள்ளி மாணவி தற்கொலை சம்பவத்திற்கு யார் யாரெல்லாம் காரணமாக இருக்கின்றார்களோ அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெறுவார்கள். இருப்பினும் மாணவிகள் தயவு செய்து தற்கொலை முடிவை கைவிடுங்கள்.
இதுபோன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்காகத்தான் அரசு 1098, 14477 உள்ளிட்ட எண்களை கொடுத்திருக்கிறது. அதை பயன்படுத்திக் கொண்டு புகார் அல்லது வேதனை, சந்திக்;கும் எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள். அதன் உண்மைத் தன்மையை கண்டறிந்து தண்டனை பெற்றுத் தருவது அரசின் கடமை.
குழந்தைகளின் மனஅழுத்தத்தை போக்கிடுவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. பெற்றோர்களாக இருந்தாலும் ஆசிரியர்களாக இருந்தாலும் முதலில் குழந்தைகள் சொல்ல வருவதை காதுகொடுத்து கேளுங்கள். குழந்தைகள் சொல்ல வந்ததை மனவேதனையை கொட்டித் தீர்க்க விடுங்கள். அதில் உண்மைத் தன்மை இருக்கிறதா? சந்தேகத்தில் சொல்கிறார்களா? பயத்தில் சொல்கிறார்களா? என்பதை அலசி ஆராய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்று கூறினார்.
Also Read
-
Sticker தொடங்கி ஸ்ரீவைகுண்டம் பாலியல் விவகாரம் வரை.. பேரவையில் விஜய் ஆட்சியை வறுத்தெடுத்த LoP உதயநிதி!
-
“தமிழ்நாட்டின் உரிமையை வலுவாக்கவே புதிய நடுவர் மன்றம்!” : தங்கம் தென்னரசு விளக்கம்!
-
மின்துறையை நடத்துவது எப்படி?: த.வெ.க அமைச்சருக்கு பேரவையில் பாடம் எடுத்த செந்தில் பாலாஜி, சிவசங்கர்!
-
“மேயர் பிரியா மீது அவதூறு.. Protocol-ஐ தெரிந்து கொள்ளுங்கள்.. MLA பல்லவிக்கு சபாநாயகர் கொடுத்த பதிலடி”
-
அம்மோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் : பேரவையில் தி.மு.க வலியுறுத்தல்!