Tamilnadu
“கழிவுநீர் பிரச்சனையால் தகராறு.. மின்வாரிய ஊழியர் அடித்துக் கொலை”: தாயும், மகனும் தலைமறைவு; என்ன நடந்தது?
கரூர் மாவட்டம் அய்யர்மலை வாட்போகி நகரில் வசித்து வருபவர் மாணிக்கவாசகம் (வயது 44). இவர் திருச்சியில் தமிழ்நாடு மின்வாரியத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் வீட்டுக்கு அருகே வசித்து வசிப்பவர் கோபாலகிருஷ்ணன் (வயது 35). கேட்டரிங் வேலை பார்த்து வருகிறார். அவரது தாய் அன்னக்கிளி (வயது 57).
நேற்று மாலை 5.30 மணி அளவில் மாணிக்கவாசகத்தின் வீட்டு கழிவுநீர் கோபாலகிருஷ்ணன் வீட்டருகே சென்றதாம். இதையடுத்து இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. கோபாலகிருஷ்ணன் மாணிக்கவாசகம் வீட்டின் மீது கல் எறிந்தாராம். மாணிக்கவாசகம் அதை பற்றி கேட்ட பொழுது மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கோபாலகிருஷ்ணன் மாணிக்கவாசகத்தை கீழே தள்ளி, கோபாலகிருஷ்ணன் தனது தாய் எடுத்துக் கொடுத்த கல்லால் மாணிக்கவாசகத்தின் தலையில் தாக்கினாராம்.
காலால் மாணிக்கவாசகத்தின் நெஞ்சின் மீது உதைத்தாகக் கூறுப்படுகிறது. இதில், படுகாயமடைந்த மாணிக்கவாசகம் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பிறகு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி குளித்தலை போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கோபாலகிருஷ்ணனும் அவரது தாய் அன்னக்கிளியும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலிஸார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!