Tamilnadu
கடன் தொல்லை; மனைவி மகனை கொன்று தற்கொலை? டெய்லர் மரணத்தில் விசாரணையை முடுக்கிவிட்ட சென்னை போலிஸ்!
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவாஜி. டெய்லராக பணியாற்றி வந்துள்ளார். அவரது மனைவி வனிதா. கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு பத்து வயதில் வெற்றி வேல் என்ற மகனும் இருந்திருக்கிறான்.
சிவாஜிக்கு போதிய வருமானம் இல்லாததால் அதிக அளவில் கடன் பெற்றுள்ளார். கடன் வாங்கியவர்களிடம் பணத்தை திருப்பி செலுத்தாததால் சிவாஜி கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதிகாலை வெகு நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சிவாஜி மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். மனைவி வனிதா கழுத்தில் கயிறு இறுகி நிலையில் தரையிலும் அவர்களின் மகன் வெற்றிவேல் உயிரிழந்த நிலையில் கிடந்திருக்கிறான்.
சம்பவம் தொடர்பாக வீட்டில் சோதனையிட்டபோது கடன் தொல்லையினால் தற்கொலை செய்துக்கொள்வதாக சிவாஜி கடிதம் எழுதி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வனிதா மற்றும் வெற்றிவேலை கொலை செய்துவிட்டு சிவாஜி தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!