Tamilnadu
திருச்சியில் ஒரு K.P.பார்க் அவலம்; மக்களை காத்த லட்சணம் இதுதானா? அதிமுகவினரால் கொதிக்கும் மக்கள்!
திருச்சி காந்தி சந்தை அருகே உள்ள தாராநல்லூர் பகுதியல் கல்மந்தை காலனி உள்ளது. அந்த பகுதியில் இருந்த குடிசை வீடுகள் கடந்த அதிமுக ஆட்சியில் (2017) குடிசை வீடுகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு, குடிசை மாற்று வாரியத்தின் கீழ் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி தொடங்கப்பட்டது. அப்போது வாழ்ந்து வந்த 237 குடும்பங்களுக்கும் வீடுகளை ஒதுக்கி கொடுப்பதாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர்.
ஆனால் அந்த இடத்தில் 192 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. கல்மந்தை காலனி பகுதியில் தொடக்கத்தில் வாழ்ந்துவந்த 64 குடும்பத்தினரிடம் ஒரு வீட்டிற்கு 63 ஆயிரம் ரூபாய் கட்டணமாக பெற்றுக்கொண்டு, அவர்கள் மட்டும் குடியேறுவதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அங்கு கட்டப்பட்ட வீடுகள் அனைத்தும் தரமற்று இருப்பதாகவும் கையில் சுரண்டினாலே அதன் சுவர்கள் பெயர்ந்து வருவதாகவும் இதனால் அந்த கட்டிடங்கள் இடிந்து விழக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் அங்கு உடனடியாக மராமத்து பணிகள் செய்து வீடுகளை உரியவர்களுக்கு விரைவாக ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி அந்த பகுதியில் குடிசைப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களுடன் மார்க்சிஸ்ட் கட்சியினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் ஆய்வு செய்ய வேண்டும், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அந்த குடியிருப்பு கட்டப்பட்ட நிலையில் அதை கட்டிய ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்கள், அதிகாரிகள் அனைவர் மீதும் தமிழக அரசு . நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு குடியேற காத்திருக்கும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சென்னை புளியந்தோப்பு பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு தரமற்று இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருச்சியில் அதே போல அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு தரமற்று இருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
டம்மியின் இடைத்தேர்தல் பிரச்சார ஸ்கிரிப்ட் ரெடியா virtual abusers? : DMK IT WING கேள்வி!
-
மர்ம காய்ச்சலால் 1 வயது குழந்தைக்கு நேர்ந்த துயரம் : சோகத்தில் மூழ்கிய கிராமம்!
-
காலை உணவுத் திட்டம் : பல்லி விழுந்த சாப்பாடு.. தவெக அரசின் அலட்சியத்தால் 40 மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!
-
‘துரோகியே வெளியில் போ‘... தலைதெறிக்க ஓடும் த.வெ.க. வேட்பாளர்கள் : முரசொலி தலையங்கம்!
-
போராட்டம் ஒரு புறம் - ரீல்சிற்காக ஆய்வு மறுபுறம்! : மின்வெட்டிற்கான தீர்வை தட்டிக்கழிக்கிறதா த.வெ.க?