Tamilnadu
நண்பனை கல்லால் அடித்து கொலை செய்த இளைஞர்... விசாரணையில் பகீர் தகவல்!
தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ். இளைஞரான இவர் செங்கல்பட்டு பகுதியில் குப்பைகளைப் பொறுக்கி, அதைக் கடையில் போட்டு கிடைக்கும் பணத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் சிவராஜ் தனது நண்பருடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு மது அருந்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிவராஜ் அங்கிருந்த கருங்கல் ஒன்றை எடுத்து தனது நண்பரின் தலையில் அடித்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பிறகு அங்கு வந்த போலிஸார் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் சிவராஜிடம் போலிஸார் விசாரணை செய்தபோது, மது குடிக்கும்போது தனது தாயைப் பற்றி அவமரியாதையாகப் பேசியதால் கல்லால் அடித்துக் கொலை செய்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து சிவராஜை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் கி.வீரமணி பேச்சு!
-
“மத ரீதியான நிகழ்ச்சி நடத்தியது மதச்சார்பின்மைக்கு விரோதமானது” : த.வெ.க அரசுக்கு CPM எதிர்ப்பு!
-
“1985 வரலாற நடக்க வச்சுடாதீங்க...” விஜய்யை எச்சரிக்கும் மீனவர்கள்.. MGR ஆட்சியில் 1985-ல் நடந்தது என்ன?
-
‘டோரதி’ – திருநங்கைகளின் வாழ்வியலைப் பேசும் துணிச்சலான முயற்சி!
-
“தமிழ்நாட்டில் விலையும், கொலையும்தான் உயர்கிறது” : த.வெ.க அரசு மீது கனிமொழி எம்.பி தாக்கு!