Tamilnadu
இராணுவ வீரர்களின் இதயங்களில் இடம் பிடித்து விட்டீர்: முதல்வருக்கு லெஃப்டினன்ட் ஜெனரல் நெகிழ்ச்சி கடிதம்!
“குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து நிகழ்ந்த செய்தியறிந்த மறுகணமே விரைந்து வந்து இறந்த வர்களுக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அரசின் சார்பில் இயன்ற உதவிகளை எல்லாம் செய்து இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இதயங்களில் தாங்கள் (முதல்வர்) ஆழமாக இடம் பிடித்து விட்டீர்கள்” என்றும், “கடினமான சூழ்நிலையில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த தங்களுக்கு (முதல்வருக்கு) மனமார்ந்த நன்றி!” என்றும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சென்னை - தக்ஷிண் பாரத், ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் அ.அருண் அவர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை, தக்ஷிண் பாரத், ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் லெப்டிணன்ட் ஜெனரல் அ.அருண் அவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம் வருமாறு :-
நீலகிரி மாவட்டத்தில் 8.12.2021 அன்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தினர் 13 பேர் உயிரிழந்த துயரமான நேரத்தில், அவர்கள் குடும்பத்தினருக்கு தாங்கள் அருகில் இருந்து ஆறுதல் அளித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றியையும், இதயபூர்வமான பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தகவல் அறிந்த உடனே- நெஞ்சை நெகிழவைக்கும் வகையில் தாங்கள் விரைந்து வந்து, இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய தோடு, அவர்கள் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்து, ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், ராணுவ உயர் அலுவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் இதயத்தில் ஆழமாக இடம்பிடித்து விட்டீர்கள்.
அந்தத் தருணத்தில் என்னென்ன உதவிகள் செய்திட முடியுமோ அந்த உதவிகளை எல்லாம் தங்களின் தலைமையின் கீழ் உள்ள தமிழ்நாடு அரசின் மொத்த நிர்வாகமும் செய்து தந்தது. இது போன்ற ஆதரவுகள்தான், எதிர்காலத்தில் நம் இளைஞர்கள் தாமாக முன்வந்து ராணுவத்தில் சேருவதற்கும், ராணுவ உடை அணிவதற்கும், உற்சாக மூட்டுவதாகவும், ஊக்கமளிப்ப தாகவும் அமையும்.
தக்ஷிண் பாரத் பகுதியின் தலைமை அலுவலர் என்ற வகையில் தங்களுடைய முன்மாதிரியானஆதரவுடன் பணியாற்று வதில் பெருமை கொள்கிறேன். உங்களுடைய இந்தச் செயல், பணியில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கும், மூத்த ராணுவ வீரர்களுக்கும் `தமிழ்நாடு அரசு நமக்கு ஆதரவாக இருக்கின்றது’ என்ற உணர்வை ஏற்படுத்தி, ஊக்கத்தை அளிப்பதோடு, தேவைப்படும் காலங்களில் அவர் களுக்கு இந்த அரசு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி யுள்ளது.
இந்தக் கடினமான சூழ்நிலையில் எங்களுக்கு உறுதுணையாக இருந்ததற்கு தங்களுக்கும் அனைத்து அரசு அலுவலர்களுக்கும்-நம்மாநிலத்திற்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!
-
வீழ்ந்த சர்வாதிகாரம்.. “உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!