Tamilnadu
பெற்ற தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற கொடூர மகன்... விசாரணையில் அதிர்ச்சி!
திருவண்ணாமலை மாவட்டம், அக்காரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயா. இவரது கணவர் இறந்துவிட்டார். இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் விஜயகுமாருக்கு மட்டும் திருமணமாகவில்லை. மற்ற இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். இதனால் விஜயகுமார் தாயுடன் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், சொத்தை பிரித்துக் கொடுக்க வேண்டும் என சில மாதங்களாக தாய் ஜெயாவை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார் விஜயகுமார். மேலும் குடிப்பதற்குப் பணம் கேட்டு தினமும் தகராறு செய்து வந்துள்ளார்.
இதையடுத்து சம்பவத்தன்று சொத்தில் பாகப்பிரிவினைக்குப் பதிலாகப் பணம் கொடுக்குமாறு கேட்டு ஜெயாவிடம் சண்டை போட்டுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன் விஜயகுமார் இரவில் தூங்கிக் கொண்டிருந்த தாய் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், தீயை அணைத்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு ஜெயா தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இளைய மகன் பூபாலன் கொடுத்த புகாரின் பேரில் போலிஸார் விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற தாயை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!