Tamilnadu
போதை ஊசி, மாத்திரைகளை மாணவர்களிடம் புழக்கத்தில் விட்ட 9 பேர் கொண்ட கும்பல்; ரவுண்டு கட்டிய சென்னை போலிஸ்!
சென்னை வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, ஆர்.கே.நகர் உட்பட சென்னை மாநகரில் கல்லூரிகள், மருத்துவமனைகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்ற பல்வேறு இடங்களில் போதை தரக்கூடிய போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்த ஒன்பது பேரை வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சிவப்பிரகாஷ் ஐபிஎஸ் நேற்று இரவு தனிப்படை அமைத்து கைது செய்துள்ளார்கள்.
போதை மருந்து விற்பனை செய்பவர்களிடம் விசாரித்த பொழுது ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னைக்கு வாங்கிவந்து இங்கு பல்வேறு இடங்களில் விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. ஒரு போதை மாத்திரையின் விலை 300 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரையிலும் மாணவ மாணவிகளுக்கு விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.
இவர்களிடமிருந்து போதை தரக்கூடிய ஊசிகள் மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்களை வண்ணாரப்பேட்டை காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் பறிமுதல் செய்து ஒன்பது பேரைக் கைது செய்து நேற்றிரவு சிறையில் அடைத்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் மருந்துக் கடை வைத்திருப்பவர்கள் இரண்டு பேரின் உதவியுடன் அங்கு இருந்து கடத்தி வரப்பட்டு இங்கு சென்னையில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில் ஒரு சிலர் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!