Tamilnadu
ஹெலிகாப்டர் விபத்து: சம்பவங்களை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை - குன்னூர் மக்கள் சொன்ன உருக்கமான பதில் !
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பன் சத்திரம் பகுதியில் உள்ள காப்பு காட்டில் கடந்த 8ஆம் தேதி காலை 12 மணியளவில் கடுமையான மேகமூட்டம் காரணமாக நாட்டின் முப்படை தளபதி பிபின் ராவுத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் உள்ள மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
கேப்டன் வருண் சிங் மட்டும் 70% காயங்களுடன் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு விமானப்படை அதிகாரி ஏர் மார்ஷல் மான் வேந்தர் சிங் தலைமையில் விமானப்படை அதிகாரிகள் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் நான்காவது நாளாக இன்றும் தடயங்களை சேகரித்து வரும் நிலையில் ட்ரோன் கேமரா மூலமும் ,தடயங்களை சேகரித்து வருகின்றனர் .
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் குன்னூர் ,நஞ்சப்பா சத்திரம் ஹெலிகாப்டர் விபத்து குறித்த விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட முத்து மாணிக்கம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவுத் ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் விபத்து குறித்து அப்பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் நஞ்சப்ப சத்திர கிராம மக்களிடையே விசாரணை நடத்தி வருகின்றனர்.
நான்காவது நாளாக இன்றும் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அப்பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நஞ்சப்பா சத்திரம் கிராமப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி 13 பேர் உயிர் இழந்ததால் நஞ்சப்ப சத்திர கிராம மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் மீட்பு பணியின் போது, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துடன் நடந்த கடைசி உரையாடலை பற்றி பேட்டி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக, குன்னூர் நஞ்சப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் கூறுகையில், இரண்டாவதாக அடையாளம் காணப்பட்ட நபரிடம் தான் நாங்கள் பேசினோம். அப்போது எங்க கிட்ட தண்ணி கேட்டாரு.. நாங்க உங்கள காப்பாத்தீடுறோம் சார்னு சொன்ன உடனே, கையெடுத்து கும்பிட்டாரு.
அம்புலன்ஸ்ல ஏத்துன வரைக்குமே கைய அப்படியேதான் வெச்சிருந்தாரு. 3 மணி நேரம் கழிச்சு ராணுவ அதிகாரி வந்து நீங்க பேசுனவருதான் முப்படை தலைமை தளபதி என அவரு இறந்துட்டாருனு சொன்னதும் ரொம்ப வேதனையாயிடுச்சு” என்றார்.
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!