Tamilnadu

இறக்கும் தருவாயிலும் பயணிகளின் உயிரை சாமர்த்தியமாக காப்பாற்றிய ஓட்டுநர்... பயணிகள் நெகிழ்ச்சி!

மதுரையிலிருந்து கொடைக்கானல் செல்லும் அரசுப் பேருந்து இன்று காலை 43 பயணிகளுடன் மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து புறப்பட்டது. பேருந்து காளவாசலை கடந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது பேருந்து ஓட்டுநர் ஆறுமுகத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மாரடைப்பு ஏற்பட்டவுடன் ஓட்டுநர் ஆறுமுகம் சாமர்த்தியமாக பேருந்தை எதிரே வந்த வாகனங்கள் மீது மோதாமல் சாலை ஓரமாக நிறுத்திய நிலையில், அவரது உயிர் பிரிந்தது.

ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பேருந்தில் பயணித்த பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே ஓட்டுநர் ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து உடனடியாக பயணிகள் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அவரது உடலை அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: “குறைந்த உயரத்தில் திரும்பியதே ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம்?” : குன்னூர் போலிஸ் சொல்வது என்ன?