Tamilnadu
“திருமணம் முடிந்த 28 நாட்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை” : சோகத்தில் கிராம மக்கள் - என்ன நடந்தது?
தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம், இவர் கம்பத்தில் கேபிளில் வசூல் செய்யும் பணி செய்து வருகிறார். இவருக்கும் கம்பம் மந்தையம்மன் கோவில் பகுதியைச் சார்ந்த புவனேஸ்வரி என்பவருக்கும் கடந்த நவம்பர் 10ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் முடிந்து 28 நாட்கள் ஆன நிலையில் இன்று புவனேஸ்வரி வீட்டில் தனியாக இருந்துள்ளார். வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது புவனேஸ்வரியின் அறை பூட்டி இருந்துள்ளது.
இதனையடுத்து தொடர்ந்து புவனேஸ்வரியின் உறவினர்கள் கதவைத் தட்டிப் பார்த்துள்ளனர். வெகுநேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர்கள் உடனடியாக வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது புவனேஸ்வரி வீட்டில் உள்ள விட்டத்தில் தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
விரைந்து வந்த கம்பம் வடக்கு காவல் துறையினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட புவனேஸ்வரி உடலை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த இறப்பு சம்பவம் குறித்து கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
திருமணம் முடிந்து 28 நாட்களே ஆன நிலையில் புதுப்பெண் மரணம் அடைந்துள்ளதால் இச்சம்பவத்தின் விசாரணையை உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா இறந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் இடையே தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!