Tamilnadu
விபத்துக்குள்ளாகும் முன் மேகமூட்டத்தில்... இராணுவ ஹெலிகாப்டரின் ‘திக்திக்’ கடைசி நிமிடங்கள்! #Video
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரிமலைப்பகுதியில் நேற்றைய தினம் இராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் உள்ளிட்ட 12 ராணுவ அதிகாரிகளும், பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா ராவத்தும் உயிரிழந்தனர்.
விபத்து தொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள பதிவில், இந்திய விமானப் படையின் எம்ஐ - 17 வி5 வகை ஹெலிகாப்டரில் பிபின் ராவத் பயணித்தார் என்றும் முப்படைகளின் தலைமைத் தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முப்படைகளின் தலைமைத் தளபதி பயணம் செய்ததால் மிகுந்த சோதனை மற்றும் பாதுகாப்புக்குப் பிறகே ஹெலிகாப்டர் இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளான இந்த ஹெலிகாப்டர் ஒன்றரை மணிநேரத்திற்கு விடாமல் தீப்பற்றி எரிந்துள்ளது. மிகுந்த போராட்டத்திற்குப் பிறகே தீ அணைக்கப்பட்டு மீட்புப்பணிகள் நடைபெற்றன. இந்த விபத்தில் 13 பேர் உடல்கள் மீட்கப்பட்டன. இதில் கேப்டன் வருண் சிங் மட்டும் 80% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், விபத்துக்குள்ளாகும் முன்பு கடுமையான மேகமூட்டத்திற்கிடையே பறந்த ராணுவ ஹெலிகாப்டர் குறித்த காட்சி வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியான வீடியோவில் மோசமான வானிலையில் மேகமூட்டத்திற்கிடையே சென்ற ஹெலிகாப்டர் ஒருகட்டத்தில் மறைகிறது.
விபத்து ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக தாழ்வாக பறந்த விமானத்தை அங்கு சுற்றுலா சென்றவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Also Read
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!
-
வீழ்ந்த சர்வாதிகாரம்.. “உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!