Tamilnadu
குடிபோதையால் நிகழ்ந்த விபரீதம்.. தாயைக் கொன்ற மகனைக் கைது செய்த போலிஸ்!
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை மேலத்தெருவைச் சேர்ந்தவர் அஞ்சலையம்மாள். இவரது கணவர் இறந்ததை அடுத்து மகன் பாவைநாதன் மற்றும் மருமகள் சரண்யா ஆகியோருடன் வசித்து வந்தார்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாவைநாதன் தினமும் குடித்துவிட்டு தாய் மற்றும் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவும் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்துள்ளார்.
அப்போது தாய் அஞ்சலையைம்மாளுக்கும், மகன் பாவைநாதனுக்குத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாவைநாதன் வீட்டின் அருகே இருந்த இரும்பு கம்பியை எடுத்து தாயின் இடுப்பில் குத்தியுள்ளார்.
இதில், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து பாவைநாதனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். குடிபோதையில் தாயை மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெருநாய்களுக்கு தடுப்பூசி... மாநகராட்சி தகவல் !
-
”பிரதமர் மோடி பேசியது அபாண்டமானது; பேசக்கூடாதது” : ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன... முழு விவரம் உள்ளே !
-
”ஓராண்டில் 15,500 பேர் மலையேற்றம்” : சுற்றுலாத்துறையில் முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு!
-
கல்லறைத் தோட்டங்கள் - கபர்ஸ்தான்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆணை என்ன?