Tamilnadu
“சமூகநீதிப் போர்க்களத்தின் சளைக்காத போராளி” : ஆசிரியர் கி.வீரமணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
திராவிட கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 89-வது பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 89-ஆம் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பெரியார் எனும் பெரும் பல்கலைக்கழகத்தில் நேரடியாகப் பயின்ற மாணவர். பகுத்தறிவு - சுயமரியாதைப் பாடங்களைப் தெளிவாகப் பயிற்றுவிக்கும் ஆசிரியர். சமூகநீதிப் போர்க்களத்தின் சளைக்காத போராளி.
முத்தமிழறிஞர் கலைஞரின் கொள்கை இளவல். நெருக்கடி நிலைக் காலத்து சித்திரவதைகளில் என்னைத் தாங்கிப் பிடித்த சக சிறைவாசி. எந்த நெருக்கடியிலும் தெளிவான கொள்கை வழிக்காட்டிடும் திராவிடப் பேரொளி.
11 வயதில் கைகளில் ஏந்திய இலட்சியக் கொடியை 89-ஆம் அகவையிலும் உறுதியாகப் பிடித்து, வருங்காலத் தலைமுறையினரிடம் பெரியாரைப் பரப்பும் பெருந்தொண்டர். தாய்க் கழகமாம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நூறாண்டுகள் கடந்து நலமுடன் வாழ்க. தொண்டறம் தொடர்ந்திடுக.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“சர்க்கரை விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும்!” : ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
-
“தமிழர் பண்பாட்டு நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் அரிய சான்று!” : தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’