Tamilnadu
சாலை ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதாக கூறும் வேலுமணி ஆதாரத்தை வெளியிடத் தயாரா?: அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி!
கோவை மாநகராட்சியில் 300 சாலைகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு நிறுத்தப்பட்டதாக கூறும் எஸ்.பி.வேலுமணி அதற்கான ஆதாரத்தை இரண்டு நாட்களில் வெளியிடட்டும் என்றும், தேர்தலுக்காக மக்களை வேலுமணி ஏமாற்றி உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் கோவை மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கலந்து கொண்டுள்ளார். இதில் கோவை மாவட்டத்திற்குத் தேவையான வளர்ச்சி பணிகளுக்கான பட்டியல்களை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஈஸ்வரன் வழங்கினார்.
இதை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கோவை வளர்ச்சி திட்டங்கள் குறித்து 16 பக்க கோரிக்கைகள் என்னிடம் வழங்கப்பட்டுள்ளன. இந்த கோரிக்கைகள் தமிழக முதல்வரின் கரங்களில் ஒப்படைக்கப்படும். அவர் இந்த கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவார்.
அதேபோல 300 சாலைகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு நிறுத்தப்பட்டதாக எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டி உள்ளார் என்ற கேள்விக்கு : அவை எந்தெந்த சாலைப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. எந்தெந்த சாலைகளுக்கு திட்ட மதிப்பீடு வழங்கப்பட்டது, அதன் வேலை உத்தரவு, வேலை தொடக்கம் ஆகியவற்றின் பட்டியலை தெளிவாக வெளியிடட்டும்.
நிர்வாக அனுமதி பெறாமல், டெண்டர்விடாமல் தேர்தலுக்காக மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக அந்த சாலை பணிகள் துவங்கப்பட்டது. நிதி ஆதாரங்கள் இல்லாமல் தொடங்கப்பட்ட பட்டியலை இரண்டு நாட்களுக்குள் வெளியிடட்டும். கோவை மாநகராட்சியின் நிதி நிலை மோசமாக உள்ளது. சாலை பணிகள் குறித்து வேலுமணியின் குற்றச்சாட்டை ஆராய்ந்து பார்த்தோம். அது போன்று ஒன்றும் இல்லை. அவர் தொடங்கியதாக சொல்லும் பணிதேர்தலுக்காக தொடங்கபட்ட பணி. 300 பணி என்று சொல்பவர் பட்டியல் வெளியிட்டிருக்கலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஜனநாயகத்தின் குரல்வளையை தன் பூட்ஸ் காலால் நெறிக்கும் த.வெ.க அரசு : தி.மு.க ஆவேசம்!
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!