Tamilnadu
“இனி பள்ளிப் பாடத்திட்டங்கள் குறைக்கப்படாது” : பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியது என்ன?
தி.மு.க இளைஞர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மன்னார்புரத்தில் உள்ள விழியிழந்த மகளிர் மறுவாழ்வு மையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், மழையின் காரணமாகப் பள்ளிகளின் பாடங்கள் குறைக்கப்படாது என தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், “தமிழ்நாட்டில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. மழை பாதிப்பு குறைந்த பிறகு பள்ளிகளில் கூடுதல் வகுப்புகள் எடுக்கப்பட்டு மாடங்கள் நடத்தப்படும். ஏற்கனவே பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படாது.
அதேபோல், தனியார்ப் பள்ளிகளுக்கு மூன்று வருடத்திற்கு ஒருமுறை உரிமம் புதுப்பிக்கப்படுவது வழக்கமான நடைமுறைதான். இந்த நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!