தமிழ்நாடு

“‘மஞ்சப்பை’ பயன்பாட்டை மீண்டும் அதிகரிக்க புதிய இயக்கம்” : நெகிழிக்கு எதிராக திமுக அரசு அதிரடி நடவடிக்கை!

‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற தலைப்பில் மாநில அளவில் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.

“‘மஞ்சப்பை’ பயன்பாட்டை மீண்டும் அதிகரிக்க புதிய இயக்கம்” : நெகிழிக்கு எதிராக திமுக அரசு அதிரடி நடவடிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தொடக்கத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படாமல் இருந்தது. அனால், நாட்கள் செல்லச் செல்ல ப்ளாஸ்டிக் பொருட்கள் மீண்டும் விற்பனைக்கு வந்தது.

இதனையடுத்து சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், இனி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தால் முதல் தடவை ரூபாய் 1 லட்சம், மீண்டும் செய்தால் ரூபாய் 2 லட்சமும், மூன்றாவது தடவையும் செய்தால் ரூபாய் 3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் . மீண்டும் அந்த நிறுவனம் தயாரித்தால் அந்த நிறுவனத்துக்கு சீல் வைக்கப்படும்.

அதேபோல தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கையிருப்பு வைத்திருந்தாலோ அல்லது வாகனங்களில் எடுத்துச் சென்றால் முதல் தடவை ரூபாய் 25 ஆயிரம் அடுத்து 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. மீண்டும் அவ்வாறு செய்தால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. நடுத்தர வணிக நிறுவனங்கள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் ஆயிரம் முதல் 5000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

“‘மஞ்சப்பை’ பயன்பாட்டை மீண்டும் அதிகரிக்க புதிய இயக்கம்” : நெகிழிக்கு எதிராக திமுக அரசு அதிரடி நடவடிக்கை!

சிறு குறு நிறுவனங்கள் விற்றால் 100 முதல் 500 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இதன்பிறகும் இந்த நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் அந்த நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும். இந்த அபராதங்களை விதிப்பதற்கு வார்டுகள் வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக மீண்டும் மஞ்சப்பை எனப்படும் விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

பிளாஸ்டிக்கால் இந்த உலகம் மிகப்பெரிய பிரச்சினையை சந்தித்து வருகிறது. ஒருமுறை உபயோகித்து வீசப்படும் பிளாஸ்டிக்குகள் 40 சதவீதம் உலகளவில் தயார் செய்யப்படுகின்றன. மக்களின் அன்றாட வாழ்க்கையில் அவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் அவை தூக்கி வீசப்பட்ட பிறகு சுற்றுச்சூழலில் பல ஆயிரம் ஆண்டுகள் தங்கி விடுகின்றன. இவற்றால் மண், ஆறுகள், கடல்களில் மிகப்பெரிய பிரச்சினைகள் உருவாகின்றன. குறிப்பிட்ட அளவு பிளாஸ்டிக்குகள் எரிக்கப்படும்போது, அவற்றில் இருந்து வரும் புகை கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இந்த பிளாஸ்டிக்கினால் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மிருகங்கள் பலியாகின்றன.

“‘மஞ்சப்பை’ பயன்பாட்டை மீண்டும் அதிகரிக்க புதிய இயக்கம்” : நெகிழிக்கு எதிராக திமுக அரசு அதிரடி நடவடிக்கை!

சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பு, ஆண்டுதோறும் உலகளவில் 14 மில்லியன் டன் பிளாஸ்டிக்குகள் கடலில் சென்று சேருவதாக ஒரு புள்ளி விவரத்தை கூறுகிறது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி 2019-20-ம் ஆண்டில் 34 லட்சத்து 69 ஆயிரத்து 780 டன் பிளாஸ்டிக் கழிவுகள் இந்தியாவில் தேக்கமடைந்தன. தமிழ்நாட்டில் மட்டும் 4 லட்சத்து 31 ஆயிரத்து 472 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அந்த ஆண்டில் தேங்கியிருந்தன.

எனவே ஒரு முறை பயன்படுத்தி வீசப்படும் பிளாஸ்டிக்குகளை தயாரிப்பது, சேமித்து வைப்பது, வினியோகம் செய்வது, போக்குவரத்துக்கு கொண்டுசெல்வது, விற்பனை செய்வது போன்றவற்றை 25.6.2018-ல் இருந்து தடை செய்தது. ஒருமுறை உபயோகித்து வீசப்படும் பிளாஸ்டிக்குகளான உணவை பொட்டலம் போடும் பிளாஸ்டிக், சாப்பாடு மேஜையில் விரிக்கும் பிளாஸ்டிக், பிளாஸ்டிக் பிளேட்டுகள், டீ கப்புகள், டம்ளர்கள், தண்ணீர் ஊற்றி வைக்கும் பிளாஸ்டிக்குகள், ஸ்டிரா, கேரி பேக், பிளாஸ்டிக் கொடிகள் போன்றவை இதில் அடங்குகின்றன. இந்த தடை உத்தரவு 1.1.2019-ல் இருந்து நடைமுறைக்கு வந்தது. இந்த தடை உத்தரவு அமல்படுத்துவதை கண்காணிப்பதற்கு மாநில அளவிலான குழு ஒன்றையும் அரசு அமைத்திருந்தது.

இந்தநிலையில் சட்டசபையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் 3.9.2021 அன்று தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு எதிரான மக்கள் இயக்கத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் அமல்படுத்துவது என்று அறிவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தில் வர்த்தக சங்கங்கள், சமூக நல அமைப்புகள், வியாபாரிகள் சங்கங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோரை இணைத்து அமல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மாவட்ட கலெக்டர்களின் வழிகாட்டுதலின்படி பிளாஸ்டிக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. இதை 4 வகைகளாக பிரித்து அரசு அமல்படுத்தும்.

“‘மஞ்சப்பை’ பயன்பாட்டை மீண்டும் அதிகரிக்க புதிய இயக்கம்” : நெகிழிக்கு எதிராக திமுக அரசு அதிரடி நடவடிக்கை!

‘மீண்டும் மஞ்சப்பை’

இந்த பிளாஸ்டிக்குகளுக்கு எதிரான மக்கள் இயக்கத்தை அரசு ஆதரிக்கும். மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் தடை உத்தரவு அமல்படுத்துவதை கண்காணிப்பதற்கான வழிமுறைகள் வகுக்கப்படும்.

இந்த பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாக மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை தயாரிப்பதற்கு குறு-சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் அரசு இணைந்து செயல்படும். அதன்படி ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற தலைப்பில் மாநில அளவில் பிரசாரம் மேற்கொள்ளப்படும். மஞ்சப்பை என்பது தமிழக கலாசாரத்தில் இணைந்த ஒன்றாகும்.

இந்த மஞ்சப்பை பிரசாரத்தின் மூலம் மக்கள் பிளாஸ்டிக் பைகளை புறக்கணித்து துணிப்பைகளை மீண்டும் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்த திட்டத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஜெர்மன் நாட்டின் அமைப்புடன் இணைந்து செயல்படுத்தும். பொட்டலம் போடுவதற்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் அடையாளம் காணப்படும்.

பள்ளி-கல்லூரிகளில் இந்த பிரச்சாரம் முன்னெடுக்கப்படும். இளைஞர்கள் இந்த பிரசாரத்துக்காக பயன்படுத்தப்படுவார்கள். இதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவிலான பணிக்குழுக்கள் அமைக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories