Tamilnadu
ஓடும் காரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை... மடக்கிப் பிடித்த போலிஸ் : நடந்தது என்ன?
சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் அதிவேகமாக சொகுசு கார் ஒன்று சென்றது. அதிலிருந்து ஒரு பெண்ணின் கூச்சல் கேட்டது. அப்போது சாலையில் பாதுகாப்புப் பணியிலிருந்த போலிஸார் உடனே காரை மடக்கி நிறுத்தினர்.
அப்போது இளம்பெண் காரில் இருந்த வாலிபர்களுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். இதையடுத்து அவர்கள் அனைவரையும் போலிஸார் நுங்கம்பாக்கம் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். இதில் இந்த இளம்பெண் ஐ.டி நிறுவனமொன்றில் பணியாற்றி வருவது தெரியவந்தது.
நேற்று இரவு அந்தப் பெண் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற கேளிக்கை விருந்தில் பங்கேற்று மது குடித்துள்ளார். இந்நிகழ்வில் அந்தப் பெண்ணுக்கு மூன்று இளைஞர்கள் அறிமுகமாகியுள்ளனர்.
பின்னர் இவர்கள் அந்த பெண்ணை வீட்டில் விட்டு விடுவதாகக் கூறி காரில் அழைத்து வந்துள்ளனர். அப்போது மூன்று இளைஞர்களும் அந்த பெண்ணிடம் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் நான்கு பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் ஆபத்தானது” : The Hindu நாளிதழ் தலையங்கம்!
-
மோன்தா புயல் : சென்னை - ஆந்திரா இடையே 9 விமானங்கள் ரத்து!
-
சென்னையில் விடிய விடிய மழை! : நள்ளிரவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீராய்வு!
-
“வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்! வாக்குத் திருட்டை முறியடிப்போம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
மருத்துவ திட்டங்களால் மக்களை பாதுகாத்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : முரசொலி புகழாரம்!