Tamilnadu

ஆற்றின் நடுவே 150 ஆடுகளுடன் வெள்ளத்தில் சிக்கிய தம்பதி : 4 மணி நேரம் போராடி மீட்ட மீட்பு படையினர்!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் அருகே நாதல்படுகை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மற்றும் அவரது மனைவி காந்திமதி ஆகியோர் கொள்ளிடம் ஆற்று பகுதியில் உள்ள திட்டில் 150 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.

இந்த தம்பதியினர் கிராமத்திலிருந்து காலையிலேயே திட்டுப்பகுதிக்கு வந்து பட்டியிலிருந்து ஆடுகளை மேய்ச்சலுக்குத் திறந்துவிடுவர். பின்னர் மாலையில் ஆடுகளைப் பட்டியில் அடைத்துவிட்டு அங்கிருந்து படகு மூலம் கிராமத்திற்கு வருவர். இதை வழக்கமாக இந்த தம்பதியினர் செய்துவந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழை காரணமாகக் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கணேசன் மற்றும் அரவது மனைவி காந்தி ஆகிய இரண்டு பேரும் 150 ஆடுகளுடன் திட்டுப்பகுதியிலேயே சிக்கிக் கொண்டனர்.

இது குறித்து அகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் 4 படகுகள் மூலம் 150 ஆண்டுகள் மற்றும் தம்பதிகளைப் பத்திரமாக 4 மணி நேரத்தில் மீட்டனர். இதையடுத்து அதே திட்டுப்பகுதியில் சிக்கிக் கொண்ட 12 புள்ளிமான்களையும் அரசு அதிகாரிகள் மீட்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் மற்றும அரசு அதிகாரிகளுக்கு கிராம மக்கள் நன்றி கூறி பாராட்டு தெரிவித்தனர்.

Also Read: ட்விட்டரில் ட்ரெண்டாகும் #KovaiWelcomesStalin.. முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்த கோவை மக்கள்!