Tamilnadu
மருத்துவமனை பணியாளரின் 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை.. கரூர் மருத்துவர் மீது போக்சோவில் வழக்கு பதிவு!
கரூர் 11-ஆம் வகுப்பு மாணவியான தனது மகளை பிரபல மருத்துவர் பாலியல் தொந்தரவு செய்ததாக மாணவியின் தாய் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மருத்துவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் பசுபதிபாளையம் அருணாசல நகரைச் சேர்ந்தவர் விமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது - வயது 38). இவர் கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையின் கணக்காளராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் கரூரில் உள்ள ஒரு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில். விமலா நேற்று கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் செய்தார். அப்புகாரில், தான் வேலை பார்க்கும் மருத்துவமனையின் மருத்துவர் நேற்று மாலை தனது மகளை அழைத்து அவரது அறையில் வைத்து பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதுபற்றி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் அறிவித்தலில் போரில் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். விமலாவின் மகளை மருத்துவமனை மேனேஜர் மூலம் அழைத்துச் சென்று மருத்துவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் மருத்துவர் ரஜினிகாந்த், அவரது மருத்துவமனை மேலாளர் சரவணன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை வருகிறது. கரூர் பகுதியில் பிரபல மருத்துவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!