Tamilnadu

வெளுத்து வாங்கும் அதி கனமழை.. பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு !

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வேற்று வலுப்பெற்று சென்னை அருகே நகர்ந்து வருகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பரவலாகப் பலத்த மழை பெய்து வருகிறது.

குறிப்பாகச் சென்னையில் நேற்று மதியத்திலிருந்தே விடாமல் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. மேலும் இன்று காலையிலிருந்து காற்றுடன் மழை பெய்து வருகிறது.

கடந்த நான்கு நாட்களாகவே சென்னையில் கன மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த நான்கு நாட்களாகக் கன மழைபெய்து வருகிறது.

இந்நிலையில் காற்றழுத்த தாழ்ப்பு மண்டலம் இன்று மாலை சென்னை அருகே கரையைக் கடக்கிறது. இதனால் தொடர்ந்து கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாகச் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Also Read: மயங்கி விழுந்த நபர்.. முதுகில் சுமந்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்த பெண் காவல் ஆய்வாளர்!