Tamilnadu
“சென்னையில் மழைநீர் தேங்குவதற்கு அ.தி.மு.க அரசின் தவறான நிர்வாகமே காரணம்”: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
முந்தைய அ.தி.மு.க அரசின் தவறான நிர்வாகம் காரணமாகத்தான் தற்போது சென்னையில் ஆங்காங்கு மழைநீர் தேங்கியுள்ளது என்றும்; கமிஷன் மட்டுமே பெற்றுக் கொண்டு திட்டப் பணிகளை முறையாகச் செயல்படுத்தாத முந்தைய அ.தி.மு.க அரசின் மீது முழு விசாரணை நடத்தப்படும் என்றும் ‘டைம்ஸ் நவ்’ ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (9.11.2021) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கன மழையால் சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்யச் செல்லும் வழியில் ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார்.
மக்களுக்கான அனைத்து வசதிகளையும் திட்டமிட்டு செய்து கொண்டிருக்கிறோம் !
அது வருமாறு:-
டைம்ஸ் நவ்: - நீங்கள் நிறைய பகுதிகளுக்குச் சென்று கொண்டிருக்கிறீர்கள், நிலைமை எப்படியிருக்கிறது?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: - மழையால் பாதிக்கப்பட்டு தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களில் எல்லாம் அரசாங்கம் சார்பாகவும், கட்சி சார்பாகவும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உணவு வசதி, தங்குவதற்கான ஏற்பாடு, மருத்துவ முகாம்கள் போன்ற எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்து கொண்டிருக்கிறோம்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல கோடி ஊழல் - உரிய விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்!
டைம்ஸ் நவ்: - Water-log-ging பிரச்சினைசிறிது குறைந்திருக்கிறதா?
முதல்வர் மு.க.ஸ்டாலின்:- ஓரளவுக்கு குறைந்திருக்கிறது, முழுமையாக குறையவில்லை. ஏனென்றால், ஏற்கனவே முந்தைய ஆட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்று போட்டு, அதில் பல கோடி ரூபாய் ஒன்றிய அரசிடமிருந்து நிதி வாங்கி, என்ன செய்தார்கள் என்றே தெரியவில்லை. முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் நடந்த உள்ளாட்சி துறையின் சார்பாக பணிகள் எதுவுமே நடைபெறவில்லை, கமிஷன் மட்டும் வாங்கியிருக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரிகிறது. இருந்தாலும், நாங்கள் சமாளித்து பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். இப்பணிகள் முடிந்தபிறகு, இதுகுறித்து உரிய விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்.
டைம்ஸ் நவ்: - இதெல்லாம் முடிந்தபிறகு அந்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
முதல்வர் மு.க.ஸ்டாலின்:- நிச்சயமாக, உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆங்காங்கு தேங்கியுள்ள மழை நீரை அகற்ற உரியவர்களுக்கு உத்தரவு!
இதனைத் தொடர்ந்து ‘டைம்ஸ் நவ்’ செய்தியாளர் கூறியதாவது:- மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையின் பல்வேறு பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3வது நாளாகப் பார்வையிட்டு, நிலைமையை கண்காணித்தார். ஆங்காங்கு தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த உரியவர்களுக்குஉத்தரவிட்டார். நகரின் பல்வேறு இடங்களில் இன்னமும் மழைநீர் தேங்கி இருக்கும் நிலையில், மேலும் கனமழை பெய்யக் கூடும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இத்தகைய நிலையில், முதலமைச்சர் ‘டைம்ஸ் நவ்’ க்குஅளித்த பேட்டியில் இதற்கு முந்தைய அரசு மழைநீர் வடிகால்களை முறைப்படி பராமரிக்கவில்லை என்றும் அதுதொடர்பான திட்டத்தை சரியாக செயல்படுத்தவில்லை. தவறான நிர்வாகத்தை மேற்கொண்டது என்றும் குறிப்பிட்டார்.
இன்றைக்கு சென்னையில் ஆங்காங்கு மழைநீர் தேங்கி இருப்பதற்கு காரணம் முந்தைய அரசின் தவறான நிர்வாகம்தான் என்று தெரிவித்த முதலமைச்சர், இதற்கான அனைத்துத் திட்டப்பணிகளில் அவர்கள் கமிஷன் மட்டும் பெற்றுக் கொண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டார். இத்தகைய முறைகேடுகள் குறித்து, முந்தைய அரசின் மீது முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். இவ்வாறு ‘டைம்ஸ் நவ்’ செய்தியாளர் தெரிவித்தார்.
Also Read
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !