Tamilnadu
10 வருஷமா எதுவுமே செய்யாம இப்ப குறை சொல்றதுக்கு எதிர்க்கட்சி தலைவர் எதுக்கு?- KKSSR ராமச்சந்திரன் தாக்கு!
10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துவிட்டு குறை கூறுவதற்கு எதிர்கட்சி தலைவர் தேவையில்லை என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் விமர்சனம்.
சென்னை மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டூர், பவானிசாகர், வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இன்று இரவு அல்லது நாளைக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகும் போது 20 செ.மீ மேல் மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது என்றும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். இன்றைய தினம் சென்னையில் மழை குறைவாக இருக்கும் என்பதால் மழை நீர் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளை மழை அதிமாக பெய்யும் பட்சத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை, ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 3 குழுக்கள், மதுரையில் 2, திருவள்ளுவரில் 1, செங்கல்பட்டில் 1 குழு என தேசிய பேரிட மீட்பு குழுவினர் தயாராக உள்ளனர் என தெரிவித்தார்.
மின்சாரத்தால் உயிரிழப்பு வரக்கூடாது என எச்சரிக்கையாக கையாள்கிறோம். மழை மற்றும் நிவாரண உதவிகளை கண்காணிக்க கூடுதல் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம். பயிர்கள் சேதம் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. பருவ மழை காலம் முடிந்ததும் நிவாரணம் வழங்கப்படும். சாய்வான நிலையில் உள்ள மரங்களின் கிளைகள் விரைந்து அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
கடலுக்கு சென்றுள்ள மீணவர்கள் அனைவரும் இன்று கரை திரும்புவர் என்றும் மீனவ கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுத்து மேடான பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 10 வருட ஆட்சியில் முறைவாரி கரைகள் அமைத்திருந்தால் மழைநீர் சூழ்ந்திருக்காது. மற்ற கட்சிகள் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பணிகள் குறித்து விளக்கிவிட்டு அதனை திமுக அரசு தொடர வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கூறினால் நியாயம் இருக்கும். ஆனால் எவ்வித பணிகளும் செய்யாமல் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து விட்டு குறை கூறுவதற்கு எதிர்கட்சி தலைவர் தேவையில்லை.
Also Read
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!