Tamilnadu

நவ.,11,12ல் மிக கனமழை: இன்னும் இரண்டே நாள்தான்; ஆழ்கடல் மீனவர்களுக்கு வானிலை மையம் முக்கிய எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வரும் நவம்பர் 9ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது அதனைத் தொடர்ந்து வருகின்ற 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று வடக்கு தமிழக கடற்கரை நோக்கி நகரக் கூடும்.

இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 9 , 10 தேதிகளிலும் , தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 10 , 11, 12 ஆகிய தேதிகளிலும், தமிழக கடற்கரை பகுதிகள் அதனையொட்டி உள்ள ஆந்திர கடற்கரைப் பகுதிகளில் 11,12 தேதிகளிலும், சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சமயங்களில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

வட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களில் நவம்பர் 11 1,2 தேதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்

ஆகவே மீனவர்கள் நவம்பர் 9, 10 தேதிகளில் தென்கிழக்கு வங்க கடல் குதிகளுக்கும், நவம்பர் 10 முதல் 12 வரை தென் மேற்கு வங்க கடல் தமிழக கடற்கரை பகுதி அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் நவம்பர் 9 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.