Tamilnadu
ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு உற்சாகமாக பள்ளி செல்லும் மாணவர்கள் : ஆசிரியர்கள் இனிப்பு கொடுத்து வரவேற்பு!
தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிர்வாகத் திறமையால் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பெருமளவு குறைந்துவருவதால் 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை, இன்று முதல் பள்ளிகள் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளன. ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி மாணவச் செல்வங்களை தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் வரவேற்று வருகின்றனர்,
இதேபோன்று, விருந்தினர்களை வாசலுக்கு வந்து வரவேற்பதைப் போன்று, நாடாளுமன்ற, சட்டமன்ற, உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் மாணவர்களுக்கு இனிப்பு, மலர்க்கொத்து வழங்கி வரவேற்பு அளித்து வருகின்றனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு இருப்பதால் ஆர்வமுடன் வகுப்பறைக்குள் மாணவர்களும், பெற்றோரும் வருகை தந்த வண்ணம் உள்ளனர். பள்ளிக்கு ஆர்வமுடன் வருகை தரும் குழந்தைகள் மற்றும் மாணவர்களை எல்லா வகையிலும் உற்சாகத்துடன் வரவேற்கவும் ஆசிரியர்கள் முழுமையாக தயாராகி உள்ளனர்.
17 மாத இடைவெளிக்குப் பிறகு, மாணவர்கள் பள்ளிக்கு வருகை தருவதால் 10 முதல் 15 நாள்களுக்கு கதை, பாடல், விளையாட்டு, வரைதல், வண்ணம் தீட்டுதல், அனுபவப் பகிர்வு, கலந்துரையாடல் போன்ற மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதற்கு பின்னர் புத்தாக்கப் பயிற்சிக்கான செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
1ஆம் வகுப்பு மாணவர்கள், முதல் முறையாக பள்ளிக்கு வருகை தருவதால் மனமகிழ்ச்சி வழிகாட்டுதலைப் பின்பற்றி குழந்தைகளின் மனவெழுச்சியை ஆற்றுப்படுத்தும் வகையில் செயல்பாடுகள் அமையவேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் 45 முதல் 50 நாள்களுக்கு நடைமுறைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், மாணவர்களுடைய கற்றல் அடைவுநிலைக் கேற்றாற்போல்கால அளவை நீட்டிப்பதை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!