Tamilnadu

“திராவிட திட்டம் எனக் கூறியிருக்கிறார் முதல்வர்.. கவனமாக செயல்படுவோம்” : அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்!

இல்லம் தேடி கல்வி திட்டத்தை கவனமுடன் செயல்படுத்துவோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “ ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை. அதற்குள் சிலர் அதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே சொன்னதுதான், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழகாக வடிவமைத்து கொடுத்த திட்டம் தான் இல்லம் தேடிக் கல்வி திட்டம். மரக்காணத்தில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி பேசும்போதுகூட இது திராவிட திட்டம் என்று பேசியிருக்கிறார்.

திராவிட திட்டம் என்று சொல்லும்போதே நாங்கள் எந்த அளவுக்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை முதலமைச்சர் வலியுறுத்தியிருக்கிறார். அந்த வகையிலே நாங்கள் கவனத்துடன் செயல்படுத்துவோம்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஏற்கனவே டெல்லி சென்று வந்துள்ளார். அவர் எப்படி வலியுறுத்துகிராரோ, ஊரடங்கு உத்தரவில் எந்த ஒரு தளர்வாக இருந்தாலும் சுகாதாரத்துறை அமைச்சரின் கருத்தைக் கேட்டுத்தான் செய்து வருகிறோம், அந்த வகையில் அவர் என்ன வலியுறுத்துகிறார்களோ அதன்படி நடவடிக்கைகள் எடுப்போம்” எனத் தெரிவித்தார்.

Also Read: “மீண்டும் பள்ளிக்கு பயில வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!