Tamilnadu
3 நாட்களுக்குக் கன மழை.. தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட்: எச்சரிக்கை விடுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் !
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நிலவி வருகிறது. இதனால் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தமிழ்நாட்டை நோக்கி நகர்கிறது.
இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்குக் கனமழை பெய்யக் கூடும் எனவும், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையையும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இதன்படி கடலோர மாவட்டங்களான சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் நவம்பர் 1ம் தேதி வரை கன மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், கடலோர மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடம். எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா, ஆலம்புழா, கோட்டயம், இடுக்கி ஆகிய 6 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Also Read
-
நெல்லையில் ரூ.56.36 கோடி செலவில் ‘பொருநை அருங்காட்சியகம்’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.கவின் நாசகார திட்டங்களை முறியடிக்கும் வலிமை தமிழ்நாட்டுக்கு உள்ளது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவுக்கு நூற்றாண்டு நினைவு மலர்... வெளியிட்டார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
கீழடி நம் தாய்மடி! பொருநை, தமிழரின் பெருமை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
அறிவுசார் தலைநகராகத் திகழும் தமிழ்நாடு : திராவிட மாடல் அரசின் தொலைநோக்கு சிந்தனைக்கு எடுத்துக்காட்டு!