Tamilnadu
குழந்தையைக் கிணற்றில் வீசிவிட்டு தாயும் தற்கொலை... விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!
கிருஷ்ணகிரி மாவட்டம், மேட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தீபா என்ற பெண்ணுடன் திருமணமானது. இந்த தம்பதிக்கு வர்ணிதா மற்றும் ஏழு மாத குழந்தையான தனுஸ்ரீ என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், தீபா நேற்று முன்தினம் தனது அம்மா வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி கணவரிடம் தெரிவித்துள்ளார். அப்போது அவர் அடுத்த நாள் அழைத்துச் செல்வதாகக் கூறிவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டார்.
இதையடுத்து வீட்டிலிருந்த உறவினர்களிடம் வெளியே சென்று வருவதாகக் கூறிவிட்டு குழந்தை தனுஸ்ரீயுடன் தீபா சென்றுள்ளார். அவர் சென்று பல மணி நேரமாகியும் வராததால் உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் கிணற்றில் ஒரு பெண்ணும், குழந்தையும் பிணமாக கிடப்பதாக போலிஸாருக்கு தகவல் வந்துள்ளது.
பின்னர் அங்கு சென்ற போலிஸார் இருவரது உடலை மீட்டனர். இறந்தது காணாமல் போன தீபாவும், அவரது குழந்தையும் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தீபாவின் தந்தை தன்னுடைய மகளின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி கிருஷ்ணன் அஞ்செட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். குழந்தையைக் கொன்றுவிட்டு இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் அஞ்செட்டி அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!