Tamilnadu
"தமிழ்நாட்டில் முற்போக்கு முளைவிட்டு கிளம்பியிருக்கிறது": தி.மு.க ஆட்சிக்கு நன்மாறன் புகழாரம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கழக அரசு நூறு நாளில் நூற்றுக்கு நூறு வெற்றி பெற்றிருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை சட்ட மன்ற முன்னாள் உறுப்பினர் என்.நன்மாறன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான என்.நன்மாறன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்.நன்மாறன் எழுதியுள்ள கடிதத்தில், “இந்தியா முழுவதும் பிற்போக்கு தலைவிரித்தாடும் போது, தமிழகத்தில் முற்போக்கு முளை விட்டு கிளம்பியிருக்கிறது. நூறு நாள் ஆட்சி 100/100 தமிழக வளர்ச்சிக்குழு அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. துறைவாரியாக சொல்ல முடியவில்லை. இந்த ஆட்சி மொத்தத்தில் நூற்றுக்கு நூறு!” இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என்.நன்மாறன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Also Read
-
புத்தக காதலர்களே தயாராகுங்கள் : ஜன. 8 ஆம் தேதி சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்!
-
சென்னை கடற்கரை பகுதிகளை பாதுகாக்க கடல்சார் உயரடுக்கு பாதுகாப்புப்படை : அதன் சிறப்புகள் என்ன?
-
பெயர் நீக்கம் மட்டுமே பிரச்சனை அல்ல: VBGRAMG சட்டத்தின் ஆபத்து குறித்து பழனிசாமிக்கு பாடம் எடுத்த முரசொலி
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!