Tamilnadu
மகனின் இறுதிச் சடங்கின்போதே தந்தையும் பலி.. புதுச்சேரியில் சோகம்!
புதுச்சேரியில் மகனின் இறுதி சடங்கின்போது மயங்கி விழுந்த தந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அய்யங்குட்டிப்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி (55). தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ராஜன் (28) என்கிற மகனும் உள்ளனர்.
ராஜனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவரை சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் மஞ்சள் காமாலை நோய் காரணமாக அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இதனால் அவரது தந்தை பெரியசாமி, தாயார் விஜயா மற்றும் உறவினர்கள் துக்கத்தில் இருந்து வந்த நிலையில் ராஜனின் இறுதிச்சடங்கு திங்கட்கிழமை அவர்களது வீட்டில் நடந்தது.
அப்போது திடீரென பெரியசாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே பெரியசாமி இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து, தந்தை, மகன் ஆகிய இருவரது உடல்களையும் ஒரே நேரத்தில் அடக்கம் செய்தனர்.
மகன் இறந்த துக்கத்தில் தந்தையும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!