Tamilnadu
“TV-யை எடுத்துக்கொண்டு வீதிவீதியாக சென்று பாடம் எடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர்” : யார் இந்த சீனிவாசன் ?
மயிலாடுதுறை மாவட்டம், நெம்மேலி ஊராட்சியில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்குச் சீனிவாசன் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்தப் பள்ளியில் படிக்கும் பல மாணவர்களின் வீடுகளில் தொலைக்காட்சி இல்லாததால், கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் படிப்பதில் சிரமம் இருந்துள்ளது.
இதனை அறிந்த சீனிவாசன் தனது சொந்த செலவில் ஒரு தொலைக்காட்சி வாங்கி, அதை நெம்மேலி கிராமத்திற்கு எடுத்துச் சென்று வீதி வீதியாக மாணவர்களுக்குக் கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் எடுத்து வருகிறார்.
ஆசிரியர் சீனிவாசனின் இந்த கல்விச் சேவையைத் தலைமைச் செயலாளர் இறையன்பு பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்று நோய் காலத்தில் நெம்மேலி நெப்பத்தூர் கிராமத்தில் இருக்கும் குழந்தைகளுக்குக் கல்வி கற்கக்கூடிய வகையில் தங்களுடைய வருமானத்தில் தொலைக்காட்சி பெட்டியை வாங்கி அரசு தொலைக்காட்சியான 'கல்வி' மூலம் அக்கிராம மாணவர்களுக்குக் கல்வி போதித்து வரும் உங்களது ஆசிரியர் பணியை நான் மிகவும் பாராட்டுகிறேன்.
தங்களிடம் படிக்கும் பிள்ளைகள் உயர்ந்த நிலைக்குச் செல்வார்கள் என்பதில் ஐயமில்லை. உங்களின் ஆசிரியர் பணி மேன்மேலும் சிறக்கவும் என வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். மேலும் ஆசிரியரின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“பேரறிஞர் அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார்! வாழ்க அண்ணாவின் புகழ்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுங்கள்! - முரசொலி தலையங்கம்!
-
“தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்!” : மு.க.ஸ்டாலின்!
-
ஜனநாயகத்தின் குரல்வளையை தன் பூட்ஸ் காலால் நெறிக்கும் த.வெ.க அரசு : தி.மு.க ஆவேசம்!
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!