Tamilnadu
பிரிந்து சென்ற காதல் மனைவி... விபரீத முடிவெடுத்த கணவன்: விக்கிரவாண்டியில் சோகம்!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த குத்தாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் திருமாறன். இவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவனை பிரிந்து விஜயலட்சுமி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனால், சில நாட்களாக மனைவி பிரிந்த துக்கத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மன உளைச்சலில் திருமாறன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குத்தாம்பூண்டி சுடுகாட்டில் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எறித்துக் கொண்டார்.
இதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் தீயை அணைத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Also Read
-
BoyFriend உடன் சேர்ந்து Blackmail.. மிரட்டி பணம் பறிப்பு.. தவெக பிரமுகர், BIGG BOSS வர்ஷினி வெங்கட் கைது!
-
டம்மியின் இடைத்தேர்தல் பிரச்சார ஸ்கிரிப்ட் ரெடியா virtual abusers? : DMK IT WING கேள்வி!
-
மர்ம காய்ச்சலால் 1 வயது குழந்தைக்கு நேர்ந்த துயரம் : சோகத்தில் மூழ்கிய கிராமம்!
-
காலை உணவுத் திட்டம் : பல்லி விழுந்த சாப்பாடு.. தவெக அரசின் அலட்சியத்தால் 40 மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!
-
‘துரோகியே வெளியில் போ‘... தலைதெறிக்க ஓடும் த.வெ.க. வேட்பாளர்கள் : முரசொலி தலையங்கம்!