Tamilnadu
வாக்கிங் செல்லும் பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டல்... கைதான இளைஞரின் அதிர்ச்சி வாக்குமூலம்!
சென்னையில் அதிகாலையில் நடைபயிற்சி செய்யும் பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஸ்டார் ஹோட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணாநகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தனது 2 மகள்களுடன் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் அவரது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
அப்பெண் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டதால் மின்னல் வேகத்தில் தப்பிவிட்டார் அந்த இளைஞர். இதனையடுத்து அவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். பெண்ணின் தந்தை இதுகுறித்து புகார் அளிக்க மறுத்து பின்னர் போலிஸார் நம்பிக்கை அளித்ததன் அடிப்படையில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலிஸார் சாலையில் நடைபயிற்சி செல்லும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது யார் என்பதை கண்டுபிடித்தனர்.
அந்த நபர் தினமும் அதே பகுதியில் நடைபயிற்சி செல்லும் பெண்களிடம் சீண்டலில் ஈடுபட்டதை உறுதி செய்த காவல்துறையினர் அவரைப் பிடிக்க அதே பகுதியில் இரண்டு நாட்களாக மஃப்டியில் காத்திருந்து சுற்றிவளைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் 20 வயதான தினேஷ் குமார் என்பதும் டெல்லியில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனத்தில் படித்து வருவதாகவும், சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் பயிற்சி செய்து வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதான தினேஷ் குமார் மீது நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் சீண்டல் குறித்த புகார் அளித்த நிலையில், அந்த நபர் விசாரணையில் தான் பாலியல் சீண்டல் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
தினேஷ்குமாரிடம் விசாரித்தபோது இருசக்கர வாகனத்தில் தான் செல்லும்போது தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை தான் வழக்கமாக கொண்டிருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து தினேஷ் குமார் மீது பெண்களை மானபங்கம் செய்தல், பெண் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலிஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!