Tamilnadu
”சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னுதாரணமாக செயல்படும் தமிழ்நாடு அரசு” - ஐ.நா. இயக்குநர் புகழாரம்!
சன்ஷைன் சென்னை சீனியர் உயர்நிலை பள்ளி சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் "சன்ஷைன் மாடர்ன் ஐக்கிய நாடு" என்ற தலைப்பில் கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கருத்தரங்க கட்டத்தில் சன்ஷைன் உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி, தொலைநோக்கு திட்டங்கள், வர்த்தகம், பாதுகாப்பு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவரிக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடையே பல்வேறு நாடுகளின் சார்பில் காலநிலை மாற்றம் தொடர்பான கருத்துக்கள் பகிரப்பட்டது.
தமிழ்நாடு உயர்ந்து வரும் நாடுகளுக்கு இணையான பல்வேறு முன்னோடித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னுதாரணமாக செயலாற்றி வருவதாகவும் தெரிவித்த ஐக்கிய நாட்டின் சுற்றுச்சூழல்துறையின் நிர்வாக இயக்குநர் எர்ரிக் சால்ஹிம், தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் கொண்டு வந்த சிறப்பு திட்டங்கள் குறித்தும் விவரித்தார்.
மேலும் தமிழ்நாடு கல்வித்துறையில் சிறந்து வழங்குவதாக தெரிவித்த அவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஐக்கிய நாட்டின் சுற்றுச்சூழல் துறையின் நிர்வாக இயக்குனர் எர்ரிக் சால்ஹிம், இந்தியாவின் நார்வே தூதர் ஹன்ஸ் ஜாகோப் ப்ரெடின்லட்ன், மற்றும் ஐக்கிய நாடு பேச்சாளர் டாக்டர் கே. அப்துல் கானி, பள்ளியின் கரஸ்பாண்டண்ட் எழிலரசி பள்ளி தலைமை ஆசிரியர் தேவிகா தினேஷ், ஆகியோர் கலந்து கொண்டனர்.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!