Tamilnadu

“சலவை தொழிலாளியின் மகளின் உயர்கல்வி கனவை நனவாக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்”: ஈரோட்டில் நெகிழ்ச்சி சம்பவம்!

ஈரோடு முத்தம் பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் - கண்மணி தம்பதி. சலவை தொழிலாளி மிகவும் ஏழ்மையான குடும்பம். இவர்களின் ஒரே மகன் சினேகா. இவர் ஈரோடு ஊராட்சி ஒன்றிய மேல்நிலை பள்ளியில் தமிழ் வழியில் பிளஸ் 2 வரை பயின்றுள்ளார்.

தனது தந்தை ஆறுமுகம் மற்றும் தாய் கண்மணி இருவரும் சலவை தொழிலாளி என்பதால் மேற்கொண்டு உயர்கல்வி பயில முடியாத நிலை ஏற்பட்டு படிப்பை கைவிடும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அனைத்து உயர் கல்வியிலும் வழங்க உத்திரவிட்டதையடுத்து மாணவி சினேகாவிற்கு பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் BE கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் இடம் கிடைத்துள்ளது.

இந்த ஒதுக்கீட்டில் இடம் கிடைப்பவர்களுக்கு கட்டணம் ஏதும் இன்றி, கல்லூரி தங்கும் விடுதி கட்டணம் உள்ளிட்டவற்றை தமிழ்நாடு அரசே ஏற்றுள்ளது. சாதாரண சலவை தொழிலாளியின் மகளின் உயர்கல்வி கனவை நனவாக்கிய தமிழ்நாடு முதல்வருக்கும் தனது படிப்பிற்கு பல வகையில் உதவி புரிந்த தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துச்சாமிக்கும் மாணவி சிநேகாவும் அவரது பெற்றோர்களும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொண்டனர்.

பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்த மாணவி சினேகாவிற்கு காசிபாளையம் தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் வ.கோவிந்தசாமி மற்றும் ஆசிரியைகள், தொடக்க பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கே.பி.குமாரசாமி, மேல்நிலை பள்ளி பெற்றோர் அசிரியர் சங்க தலைவர் அண்ணமார் பி.கே வெங்கடாச்சலம், செயலாளர் கே.சி.தங்கமுத்து ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்

Also Read: அ.தி.மு.க-வில் உச்சத்தை எட்டும் உட்கட்சி பூசல்.. கூட்டத்தை புறக்கணித்த மாஜி அமைச்சர் - நடந்தது என்ன?