Tamilnadu
”காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படுமா?” - அமைச்சர் அன்பில் மகேஷ் கூறிய நல்ல செய்தி என்ன தெரியுமா?
சென்னை டிபிஐ வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெறும் மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தொடங்க கல்வி இயக்குநர் அறிவொளி, பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலரகள் உள்ளிட்டோர் இந்த கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நவம்பர் 1-ஆம் தேதியில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு பள்ளிகள் திறப்பது, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
அதனைக் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது,
மாதந்தோறும் நடைபெறும் வழக்கமான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பெயரில், நவம்பர் 1-ஆம் தேதியிலிருந்து ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பெற்றோர்கள் தைரியமூட்டும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும். பள்ளிகள் திறப்பு என்பது மாணவர்களை பள்ளிக்கு தொடர்ந்து வருவதை பழக்கப்படுத்துவதற்குதான்.
திட்டமிட்டபடி நவம்பர் 1ஆம் தேதி ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி செயல்படும். காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு நடைபெறாது. அதற்குப் பதிலாக பொதுத்தேர்வை எதிர்கொள்வதற்கு டிசம்பர் மாதத்தில் மாணவர்களுக்கு தேர்வு ஒன்று நடத்தப்படும். மார்ச் மாதத்தில் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என தெரிவித்தார்.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!