Tamilnadu
“T-Shirts வாங்க குவிந்த மதுரை மக்கள்.. கடைக்கு பூட்டுப்போட்ட காவல்துறை” : காரணம் என்ன?
மதுரை மாவட்டம், கோ.புதூரில் உள்ள ஜவுளிக்கடை ஒன்று, இரண்டாவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்திருந்தனர். குறிப்பாக ரூபாய் 10க்கு சட்டை மற்றும் டீ.சர்ட் விற்பனை செய்யப்படும் என்ற கடையின் அறிவிப்பைப் பார்த்த பொதுமக்கள் ஜவுளிக்கடையில் குவிந்தனர்.
இன்று காலை கடை திறப்பதற்கு முன்பே கூட்டமாக பொதுமக்கள் குவிந்து வந்தனர். பின்னர் கடை திறந்த பிறகு நீண்ட வரையில் காத்திருந்து, பத்து ரூபாய் சட்டை மற்றும் டீ.சர்ட்டுகளை மகிழ்ச்சியாக வாங்கிச் சென்றனர்.
அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால், துணிகளை வாங்க பொதுமக்கள் கூட்டம் கூடடமாக குவிந்ததால் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பொதுமக்கள் மறந்தனர். மேலும் கடை உரிமையாளரும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை. மேலும், பொதுமக்கள் அதிகமாக வந்ததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வேலை மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் இப்படி மக்களைக் கூட்டமாகக் குவிப்பதா? என ஜவுளிக்கடையின் உரிமையாளரை எச்சரிக்கை செய்தனர். பின்னர் போக்குவரத்தை சரி செய்து, கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என கூறி போலிஸார் கடையைப் பூட்டிச் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read
-
“இதுதான் என்னுடைய 2026 தேர்தலுக்கான வாக்குறுதி” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன அதிகாரபூர்வ தகவல்!
-
தமிழ்நாடு அரசின் ‘உங்க கனவ சொல்லுங்க..’ : உங்கள் எதிர்கால கனவுகளை தெரிவிப்பது எப்படி? - விவரம் உள்ளே!
-
திருப்பரங்குன்றம் விவகாரம் : ‘‘பியூஷ் கோயலின் ‘பியூஸ்’ போன வாதங்கள்...” - முரசொலி தலையங்கம்!
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!