Tamilnadu

வாங்கிய பொருட்களுக்கு பணம் கேட்ட கடைக்காரருக்கு கொலை மிரட்டல்.. அடாவடி செய்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி?

சென்னை, கோயம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் லிங்கேஸ்வரி. இவர் தனது வீட்டின் முன்பகுதியில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அவரின் கடைக்கு இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர்.

அவர்கள் கடையில் சில பொருட்களை வாங்கியுள்ளனர். அப்போது வாங்கிய பொருட்களுக்குப் பணம் தரவேண்டும் என லிங்கேஸ்வரி கூறியுள்ளார். பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் உடனே கத்தியைக் காட்டி பணம் கொடுக்க முடியாது என மிரட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கடையைப் பூட்டி விட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார். இருந்தபோதும் அந்த இளைஞர்கள் அவரது வீட்டின் கதவைத் தட்டி தகராறு செய்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலிஸார் இரண்டு இளைஞர்களைப் பிடித்து விசாரணை நடத்தியதில் ஜெயக்குமார், பொன் ராமகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Also Read: “சாமி சிலைகளை உடைத்து எந்திர தகடுகளை திருடி வந்தது ஏன்?” : கைதானவர் கொடுத்த ‘திடுக்’ வாக்குமூலம்!