Tamilnadu
டீசலை பாத்திரங்களில் பிடித்துச் சென்ற மக்கள் : நடுரோட்டில் நடந்தது என்ன?
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகா பாரநாசல் பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்கனி. இவர் மதுரையில் உள்ள தனியார் பார்சல் நிறுவனம் ஒன்றில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு மதுரையிலிருந்து சென்னைக்கு லாரியில் பார்சல்களை ஏற்றிக் கொண்டு வந்துள்ளார். லாரி, திண்டிவனம் அடுத்த விளங்கம்பாடி சாலை அருகே இன்று வந்து கொண்டிருந்தது.
அப்போது, தூக்கக்கலக்கத்தில் இருந்த செல்வக்கனி, லாரியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளார். இதனால் சாலையோர தடுப்பில் லாரி மோதி நின்றது.
இந்த விபத்தில் லாரியின் டீசல் டேங்கில் உடைப்பு ஏற்பட்டு, அதிலிருந்த டீசல் முழுவதும் சாலையில் வழிந்தோடியது. இதைப் பார்த்த அப்பகுதிமக்கள் வாளி மற்றும் பாத்திரங்கள் மூலம் டீசலை பிடித்துச் சென்றனர். இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
ஏன் வெளியே சென்றார்கள் : ஆஸ்திரேலிய வீரர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் - பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு!
-
பீகார் தேர்தல் - பா.ஜ.க ஆசையில் மண்ணைப் போட்டது 'இந்தியா' கூட்டணி : முரசொலி!
-
“இந்த வெற்றிக்கு காரணமான முதலமைச்சருக்கு நன்றி” - தங்கம் வென்ற கபடி வீரர்கள் நெகிழ்ச்சி!
-
தென்காசி பகுதியில் வெட்டப்பட்ட பனை மரங்கள்.. பரப்பப்படும் வதந்தி... உண்மை என்ன? - TN Fact Check விளக்கம்!
-
"என்னய வச்சி Famous-ஆக நினைக்குறாரு வினோத்" : விஜய் சேதுபதியிடம் குற்றச்சாட்டை அடுக்கிய திவாகர்!