Tamilnadu
கம்பத்தில் கட்டி வைத்து நாயை அடித்து துன்புறுத்திய நபர்... சிறையில் அடைத்த போலிஸ் : நடந்தது என்ன?
கோவை மாவட்டம், புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் தனது வளர்ப்பு நாயைத் தெருவில் இருக்கும் மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாகத் தாக்கினார்.
இதுதொடர்பான வீடியோ சில நாட்களுக்கு முன்பு வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் விலங்குகள் நல சங்க நிர்வாகி மினிவாசுதேவன், மாரிமுத்து வீட்டிற்குச் சென்று இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் கேட்டுள்ளார்.
அதற்கு மாரிமுத்து, அவரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். பின்னர் இதுகுறித்து மினிவாசுதேவன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், மாரிமுத்துவிடம் இருந்து நாயை மீட்டு விலங்குகள் நல சங்கத்தினர் தங்களின் காப்பகத்திற்கு எடுத்துச் சென்றனர்.
Also Read
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!