Tamilnadu

“600 கிலோ திருக்கை மீன்.. காரைக்கால் மீனவர்களுக்கு அடித்த ஜாக்பாட்” : நடுக்கடலில் நடந்தது சுவாரஸ்யம்!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த, மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் வீரக்குமார். இவருக்குச் சொந்தமான விசைப்படகில் கடலில் மீன் பிடிக்க இன்று காலையில் மீனவர்கள் சென்றுள்ளனர். பின்னர் நடுக்கடலுக்குச் சென்ற மீனவர்கள், தங்கள் வலைகளை விரித்து மீனைப் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மீன் வலையில் சிக்கியதை உணர்ந்த மீனவர்கள் வலையை மேல இழுத்தபோது இன்ப அதிர்ச்சியடைந்தனர்.

இவர்களது வலையில் மருத்துவ குணம் கொண்ட திருக்கை மீன் சிக்கியதே இவர்களது மகிழ்ச்சிக்குக் காரணம். மேலும் சுமார் 600 கிலோ எடை கொண்ட திருக்கை மீனை மீனவர்கள் போராடி படகில் ஏற்றியுள்ளனர். இதையடுத்து வெற்றி கலிப்பில் திருக்கை மீன் னுடன் செல்பி எடுத்து கரையில் இருக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், மீனவர்களுக்கும் அனுப்பிய வைத்துள்ளனர்.

இதை அறிந்த வியாபாரிகள் திருக்கை மீனவாங்க இப்போதே நீயா நான என முந்திக் கொண்டு இருக்கிறார்கள். இந்த மீனவர் குழு நாளைதான் கரைக்கு வரும். ஆனால் இப்போதே மீனை வாங்க வியாபாரிகள் போட்டிப்போட்டு கரையில் காத்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கு இடையே கேரளாவைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் மருத்துவ குணம் கொண்ட திருக்கை மீனை விலை பேசி வாங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

Also Read: ”நடைபாதையில் உறக்கம்; வேகமாக வந்த கார்..” - மனைவியுடன் சண்டையிட்ட கணவருக்கு நேர்ந்த துயரம்!