Tamilnadu
“உடல்நிலை சரியில்லாத பாட்டியை எரித்து கொலை செய்த பேரன்” : விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!
தஞ்சாவூர் மாவட்டம், செங்கமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி தனலெட்சுமி. இந்த தம்பதிக்கு அஜீத்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பு பழனிவேல் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.
பின்னர் தனலெட்சுமி, மகன் அஜீத்குமாரை வளர்ந்து வந்தார். இவரும் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இதனால் அஜீத்குமாரை அவரது பாட்டி செல்லம்மாள் கூலி வேலைக்குச் சென்று பார்த்துக் கொண்டு வந்தார். மேலும் அஜீத்குமார் வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்துவந்துள்ளார்.
இந்நிலையில், செல்லம்மாளுக்கு கடந்த மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் வீட்டில் எதுவும் சமைக்க முடியாததால் அஜீத்குமார் வீட்டிலிருந்த தண்ணீர் மட்டுமே குடித்து வந்துள்ளார்.
இதையடுத்து மூன்று நாட்களாக இப்படியே சென்றதால் ஆத்திரமடைந்த அஜீத்குமார் பாட்டி என்றும் பாராமல் வீட்டின் வாசலிலேயே செல்லம்மாளை உயிரோடு தீ வைத்துக் கொளுத்தியுள்ளார். மேலும் வீட்டில் வளர்ந்து வந்த மூன்று நாய்களையும் சேர்த்துக் கொளுத்தியுள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது பற்றி போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் தீ காயத்துடன் இறந்த நிலையில் கிடந்த செல்லம்மாளின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு அஜீத்குமாரைக் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சொந்த பாட்டியையே தீ வைத்து பேரன் கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!
-
“VBGRAMG சட்டம் - பாஜகவிற்கு தமிழ்நாடு பாடம் புகட்டும்” : தலைவர்கள் கண்டன உரை!
-
“சென்னை பெசன்ட் நகர் ‘உணவுத் திருவிழா’ டிசம்பர் 28 வரை நீட்டிப்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி தகவல்!
-
ஒன்றிய அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ்நாடு : வின் அதிர எழுந்த VBGRAMG சட்டம் ஒழிக! முழக்கம்!
-
“ஒட்டுமொத்த இந்தியாவிற்கான தமிழ்நாட்டின் குரல்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!