Tamilnadu
மின்சாரம் தாக்கி பசுமாடு பலி.. காப்பாற்ற முயன்ற வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்: தி.மலையில் நடந்த சோகம்!
திருவண்ணாமலை மாவட்டம், கஸ்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வரசு. நேற்று இரவு இவரது பகுதியில் பலத்த மழை பெய்ததால் இவரது வீட்டின் அருகே இருந்த உயர் அழுத்த மின் கம்பி அறு கீழே விழுந்தது.
அப்போது, இவரது வீட்டிலிருந்த பசுமாடு உயர் அழுத்த மின் கம்பியை மிதித்த போது மின்சாரம் தாக்கியுள்ளது. இதனால் மாட்டின் அலறல் சத்தம்கேட்டு வீட்டிலிருந்து செல்வரசு வெளியே வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் பசுமாட்டைக் காப்பாற்ற முயன்றார். அப்போது செல்வரசு மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் பசு மாடுவும், செல்வரசும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் செல்வரசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மின்சாரம் தாக்கி பசு மாடும், வாலிபரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”கொளத்தூரின் ஒவ்வொரு தெருவிலும் நான் உருவாக்கிய திட்டங்கள்”- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
’அழக்கூடாது’... கொளத்தூர் மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்!
-
2026 சட்டமன்ற தேர்தல் : 11 ஆவது தோல்வி - 16 தொகுதிகளில் டெபாசிட் இழந்த அ.தி.மு.க!
-
“நெருப்பாற்றில் நீந்தி மீண்டெழுபவர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்” : தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி!
-
“பிரெடரிக் ஏங்கல்ஸ் இல்லாவிட்டால் மார்க்சியம் உருவாகியிருக்குமா?” : கலைஞர் எழுதிய சுவாரஸ்ய கடிதம் !