Tamilnadu

3வது திருமணத்திற்கு தடையாக இருந்த குழந்தையை காசுக்கு விற்ற தாய்: குழந்தையை மீட்டு தந்தையிடம் ஒப்படைப்பு !

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும், தூத்துக்குடி கொத்தனார் காலனியை சேர்ந்த ஜெபமலர் என்பவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு அதிவீரமாறன் என்ற 9 மாத ஆண்குழந்தை உள்ளது.

இந்நிலையில், கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெபமலர் தனது கணவரை பிரிந்து குழந்தையுடன் தூத்துக்குடிக்கு வந்துவிட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன் தனது மனைவி, குழந்தையை பார்ப்பதற்காக தூத்துக்குடிக்கு வந்தார்.

அப்போது, வீட்டில் குழந்தை இல்லை. ஜெபமலரிடம் கேட்டபோது சரியான பதில் கூறவில்லை. இதற்கிடையே, ஜெபமலர் தனது குழந்தையை புரோக்கர் மூலம் விற்பனை செய்து விட்டதாக மணிகண்டனுக்கு தெரியவந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார். இதில் குழந்தை ரூ. 3 லட்சத்துக்கு நாகர்கோவிலைச் சேர்ந்த தம்பதியருக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் ஜெயமலருக்கு மூன்றாவது திருமணம் செய்வதற்காக குழந்தை விற்பனை செய்து, அந்த பணத்தில் ஆடம்பரமாக செல்போன் வாங்கி செலவு செய்து உள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக நாகர்கோவில் மேலசூரங்குடியைச் சேர்ந்த செல்வமணி, அவரது மனைவி தேவி மற்றும் புரோக்கர் கார்த்திகேயன் ஆகிய 3 பேரை போலிஸார் கைது செய்து அவர்களிடம் இருந்து குழந்தை மீட்டனர். தேலும் இவ்வழக்கில் தொடர்புடைய குழந்தையின் தாய் ஜெபமலர் தாய்மாமா டேனியல் உள்ளிட்ட 4 பேரை போலிசார் தேடி வருகின்றனர்.

Also Read: கணவனைக் கொன்று கிணற்றில் வீசிய மனைவி.. திருமணமாகி 4 மாதத்தில் நடந்த கொடூரம் - விசாரணையில் ‘பகீர்’ தகவல்!