Tamilnadu
“பள்ளிக்கு சென்ற சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த இளைஞர்” : போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பொன்னேரி குரும்பர் வட்டம் பகுதியை சேர்ந்த விஜய் (வயது 26), கன்டெய்னர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 6 மாதமாக வாணியம்பாடி அடுத்த கணவாய்புதூர் பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் (15 வயது) மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பேசி வந்துள்ளார்.
இதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. இதனிடையே சிறுமிக்கு கட்டாய திருமணம் நடந்துள்ளதாகவும் தெரியவந்தது. இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் வாணியம்பாடி நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து போலிஸார் இதுகுறித்து விசாரணை நடத்தியதில், விஜய் பள்ளிக்கு சென்ற சிறுமியை கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து விஜய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!