Tamilnadu
“இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பி பள்ளி மாணவிக்கு தொல்லை கொடுத்த இளைஞர்” : போக்சோவில் கைது செய்த காவல்துறை!
சென்னை கொருக்குப்பேட்டையில் பள்ளி மாணவிக்கு இன்ஸ்டாகிராமில் போலி ஐடி மூலம் குறுஞ்செய்தி அனுப்பி தொல்லை கொடுத்த இளைஞரை தண்டையார்பேட்டை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் போலிஸார் கைது செய்தனர்.
தண்டையார்பேட்டையில் தனியார் பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் மாணவி ஆன்ட்ராய்டு செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்பு வீட்டிலிருந்து படித்து வருகிறார். இந்நிலையில் ,தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தங்கை புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் DPயில் வைத்துள்ளார்.
இதனையடுத்து மர்மநபர் ஒருவர் இரவு 10 மணிக்கு சேட் செய்ய தயாரா இரு என்று குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அந்த குறுஞ்செய்தி முகவரி கிரேசி குயின் கீர்த்தி என்ற பெயரில் இருந்தது.
இதுகுறித்து பள்ளி மாணவி தனது தாயிடம் தெரிவித்துள்ளனர். மாணவியின் பெற்றோர் தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலிஸார் விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணையில் மணலி புது நகர் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய கலைச்செல்வன் என தெரியவந்தது. இவர் போலி ஐடி மூலம் இன்ஸ்டாகிராமில் மாணவிகளுக்கு தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதனையடுத்து தவறான முறையில் தகவல் தொழில்நுட்பத்தை பயன் படுத்தியதாகவும் மாணவிகளுக்கு மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்ததாக கலைச்செல்வனை. போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!